இரணவில சிறுவன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

இரணவில சிறுவன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

இரணவில சிறுவன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2018 | 4:25 pm

COLOMBO (News 1st) – சிலாபம் – இரணவில் பகுதியில் சிறுவனொருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தி கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து தலைமறைவாகியிருந்த குறிந்த நபர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 25 ஆம் திகதி காணாமற்போயிருந்த 9 வயதான குறித்த சிறுவன் 27 ஆம் திகதி சதுன்கம காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிலாபம் இரணவில் வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி பயின்ற ஜூவான் ஜோடிகே சுசித் நிர்மால் எனும் சிறுவன் காணாமற்போய் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையூடாக தெரியவந்தது.

கொலை இடம்பெற்ற தினத்திலிருந்து குற்றவாளியைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுவன் காணாமற்போன தினத்தன்று, வீட்டிற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் நடத்தப்பட்டன.

சிறுவனுக்கு அங்கிருந்த ஒருவர் ஏதோ ஒன்றை வழங்க முயற்சிக்கும் விதம் கமராவில் ஒளிப்பதிவாகியிருந்தது.

கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 260 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்