பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வௌியிடப்பட மாட்டாது

பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வௌியிடப்பட மாட்டாது

பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வௌியிடப்பட மாட்டாது

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 3:32 pm

பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வௌியிடப்பட மாட்டாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (02) தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், அரசியல் கட்சிகள் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

கிராமத்திற்கு பொறுப்புக்கூறும் மக்கள் பிரதிநிதியை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்