வேலையற்ற பட்டதாரிகளுக்கு 6 மாதங்களில் தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 7:44 pm

Colombo (News 1st)

வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் அடுத்த 6 மாதங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது 200 பட்டதாரிகளுக்கும் 42 டிப்ளொமாதாரிகளுக்கும் ஜனாதிபதியினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்