விமானப்படையின் சைக்கிளோட்டம்: ஜனக்க முதலிடம்

விமானப்படையின் சைக்கிளோட்டப் பந்தயம்: இரண்டாம் கட்டத்தில் கடற்படையின் ஜனக்க ஹேமந்தகுமார முதலிடம்

by Bella Dalima 03-03-2018 | 8:20 PM
  Colombo (News 1st) இலங்கை விமானப்படையின் சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் கடற்படையின் ஜனக்க ஹேமந்தகுமார முதலிடத்தைப் பிடித்தார். ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் ஊடக அனுசரணை வழங்கும் இந்த மாபெரும் சைக்கிளோட்டப் பந்தயம் நாளை (04) நிறைவடையவுள்ளது. இலங்கை விமானப்படை சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டம் புத்தளம் - பாலாவி பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய பந்தயத்தின் தூரம் 170 கிலோ மீட்டர்களாகும். பந்தயத்தில் கடற்படையின் ஜனக்க ஹேமந்தகுமார முதலிடத்தைப் பிடித்தார். இராணுவத்தின் லக்ஸ்மன் விஜேரத்ன இரண்டாம் இடத்தையும், விமானப்படையின் புத்திக வர்ணகுலசூரிய மூன்றாமிடத்தையும் அடைந்தனர். முதல் நாளில் 150 பேர் பங்கேற்ற போதிலும், விபத்துகள், உபாதைகள் காரணமாக 20 பேர் வரை போட்டியிலிருந்து விலகியிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.