வார இறுதி நாட்களில் கண்டி முதல் எல்ல வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

வார இறுதி நாட்களில் கண்டி முதல் எல்ல வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

வார இறுதி நாட்களில் கண்டி முதல் எல்ல வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 4:26 pm

Colombo (News 1st)

இன்றிலிருந்து வார இறுதி நாட்களில் கண்டி முதல் எல்ல வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் இரண்டு சேவைகள் முன்னெடுக்கபடவுள்ளதுடன், முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், கண்டியிலிருந்து காலை 7.40 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், பிற்பகல் 1.28 க்கு எல்லயை அண்மிக்கும்.

மீண்டும், எல்லயிலிருந்து பிற்பகல் 2.15 க்கு பயணிக்கும் ரயில், இரவு 8.05 அளவில் கண்டியை வந்தடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

பயணிகள் கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்