பர்கினா பசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்: 8 பேர் கொலை, 80 பேர் காயம்

பர்கினா பசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்: 8 பேர் கொலை, 80 பேர் காயம்

பர்கினா பசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்: 8 பேர் கொலை, 80 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 5:35 pm

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் தலைநகர் குவாகாடோகாவில் நேற்று (02) நண்பகல் வேளையில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

80 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 5 பேர் அங்குள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் இராணுவ முகாமை இலக்கு வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனக் குண்டுத்தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

பர்கினா இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருதரப்பிலும் சேர்த்து 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் என கூறப்பட்டுள்ளபோதும், இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்