இந்தியாவில் 3 மாநிலங்களில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை

இந்தியாவில் 3 மாநிலங்களில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை

இந்தியாவில் 3 மாநிலங்களில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 4:40 pm

இந்தியாவின் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

திரிபுராவில் கடந்த மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றதுடன், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

60 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த 3 மாநிலங்களிலும் 59 தொகுதிகளுக்கு மாத்திரமே தேர்தல் நடைபெற்றது.

இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை வகிக்கின்றது.

இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்