ஆனமடுவ பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டோரை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

03 Mar, 2018 | 3:49 pm

Colombo (News 1st)

ஆனமடுவ – தோணிக்கல் பகுதியில் அடையாளந்தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று (02) இரவு 9.30 அளவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டோரை சுற்றிவளைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்