Colombo (News 1st)
எமது சகோதர வானொலி சேவையான சிரச FM தனது 24 ஆவது வருடப் பூர்த்தியை இன்று கொண்டாடுகின்றது.
நாட்டின் தொடர்பாடல் துறையில் புதிய பரிணாமத்தை வழங்கி, 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி சிரச வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி 24 மணித்தியாலங்களும் ஒலிபரப்பாகும் முதலாவது சிங்கள வானொலி சேவையாக, சிரச FM கால்தடம் பதித்தது.
சிறந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மக்களின் மனங்களைக் கவர்ந்துள்ள சிரச FM பல விருதுகளுக்கும் பாத்திரமாகியது.
24 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் சிரச FM-இற்கு நியூஸ்ஃபெஸ்ட் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.