கானாவில் கணினிக் கல்வியை கரும்பலகையில் கற்பிக்கும் ஆசிரியர்

கானாவில் கணினிக் கல்வியை கரும்பலகையில் கற்பிக்கும் ஆசிரியர்

கானாவில் கணினிக் கல்வியை கரும்பலகையில் கற்பிக்கும் ஆசிரியர்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2018 | 7:48 pm

கானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.

கானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை புரிகிறார் 33 வயதான ரிச்சட் அப்பயா அகடோ.

இந்த பாடசாலையில் கணனி இல்லாத போதும், பாடசாலையில் இருந்து பெருமளவிலான மாணவர்கள் தேசிய தகவல் தொழில்நுட்ப பாடநெறிக்கு தோற்றி வருகின்றனர்.

கணினிசார் கற்கை நெறியை கரும்பலகையில் தத்ரூபமாக வரைந்து மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார் ரிச்சட் அப்பயா அகடோ .

இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியமையைத் தொடர்ந்து, மைக்ரோசொப்ட் நிறுவனம் குறித்த பாடசாலைக்கு கணினிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், ரிச்சட் அப்பயா அகடோவிற்கு மடிக்கணினியையும் வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், தனக்கு மடிக்கணினி வழங்குவதற்குப் பதிலாக மாணவர்களுக்கான கணினியை வழங்குமாறு ரிச்சட் அப்பயா அகடோ கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்