லலித் வீரதுங்க வௌிநாடு சென்று வர அனுமதி

லலித் வீரதுங்க வௌிநாடு சென்று வர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

by Bella Dalima 02-03-2018 | 4:18 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றம் வசமுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக அவரிடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரத்தியேகப் பயணமொன்றை ​மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கும், கடமை நிமித்தம் கட்டாருக்கும் விஜயம் செய்வதற்கு லலித் வீரதுங்க கொழும்பு மேல்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அதனை நிராகரித்து உத்தரவிட்டார். குறித்த உத்தரவைக் கேள்விக்குட்படுத்தி லலித் வீரதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் அனுமதியளித்துள்ளது.