அசர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் தீ:24 பேர் பலி

அசர்பைஜானில் போதை மறுவாழ்வு நிலையத்தில் பரவிய தீயால் 24 பேர் பலி

by Bella Dalima 02-03-2018 | 6:11 PM
அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் செயற்பட்டு வந்த போதை மறுவாழ்வு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். போதை மறுவாழ்வு நிலையத்தில் இன்று காலை திடீரென தீ பரவியுள்ளது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியும் முன்னெடுக்கப்பட்டது. எனினும், அந்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கிய மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.