விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிளோட்டப் பந்தயம்: சஜித் ஹசந்த முன்னிலை

விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிளோட்டப் பந்தயம்: சஜித் ஹசந்த முன்னிலை

விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிளோட்டப் பந்தயம்: சஜித் ஹசந்த முன்னிலை

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2018 | 9:15 pm

Colombo (News 1st)

விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிளோட்டப் பந்தயத்தில் முதல் நாளில் துறைமுக அதிகார சபையின் சஜித் ஹசந்த முன்னிலை பெற்றார்.

இராணுவத்தின் சுபுன் குமார இரண்டாமிடத்தையும், பொலிஸ் கழகத்தின் சுதீர நிரங்க மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இந்த சைக்கிளோட்டப் பந்தயத்திற்கு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

விமானப்படையின் தலைமையகம் முன்பாக இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் பந்தயத்தில் 150-ற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

விமானப்படையின் உயர் அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட்டோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக நடத்தப்படும் இந்த சைக்கிளோட்டப் பந்தயத்தில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றிருப்பதும் சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்