உதயங்க வீரதுங்க துபாயில் தங்கியுள்ளதாக தகவல்

உதயங்க வீரதுங்க துபாயில் தங்கியுள்ளதாக தகவல்

உதயங்க வீரதுங்க துபாயில் தங்கியுள்ளதாக தகவல்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2018 | 4:06 pm

Colombo (News 1st)

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கலந்துரையாடியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

உதயங்க வீரதுங்க தொடர்பிலான விசாரணைகளுக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கை விமானப்படைக்கு யுக்ரைனில் இருந்து மிக் 27 ரக விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது முறையற்ற விதத்தில் பணம் சேகரித்தமை உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்ட பிரதான குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கையிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் தேடப்படும் சந்தேகநபராக சர்வதேச பொலிஸாரால் பெயரிடப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்