பெரிய நீலாவணையில் பலத்த காற்று: பலர் பாதிப்பு

பெரிய நீலாவணையில் பலத்த காற்று: 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு

by Staff Writer 01-03-2018 | 9:50 AM
COLOMBO (News 1st) - அம்பாறை - கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று காரணமாக சுமார் 30 வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் தெரிவித்தார். பெரிய நீலாவணைப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பலத்த காற்று வீசியதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் குறித்த பகுதியில் 54 கட்டடங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்து உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.youtube.com/watch?v=UB4fxHwgtmY