முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி தேவஸ்தானத்தில் வழிபாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி தேவஸ்தானத்தில் வழிபாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி தேவஸ்தானத்தில் வழிபாடு

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2018 | 9:17 pm

இந்தியாவிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி தேவஸ்தானத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னரும் 2014 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் திருப்பதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்குக் கண்டனம் தெரிவித்த அவர், தமது அரசாங்கம் வௌிப்படைத்தன்மையுடன், தனியார்மயமாக்கலுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை நோக்கி செயலாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்