பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள்: தாய்லாந்தில் விநோதம்

பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள்: தாய்லாந்தில் விநோதம்

பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள்: தாய்லாந்தில் விநோதம்

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2018 | 5:56 pm

தாய்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் பேய்க்குப் பயந்து இரவு வேளையில் பெண்களைப் போன்று உடை அணியும் விநோத நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

அந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த கணவனை இழந்த பெண் ஒருவரின் ஆத்மா அவர்களைக் கொன்றுவிட்டதாக கிராமத்தார் நம்புகின்றனர்.

அதனால் வீட்டில் உள்ள ஆண்களை இரவில் பெண்கள் போல் உடை அணிந்து தூங்குமாறு உறவினர்கள் வற்புறுத்துகின்றனர்.

வீட்டு வாசலில் ‘இங்கு ஆண்கள் இல்லை’ எனவும் எழுதி வைக்கின்றனர்.

சிலர் தமது வீட்டு வாசல்களில் விநோத பொம்மை உருவங்களையும் வைத்து, பாதுகாப்புப் பெற முயல்கின்றனர்.

இதனைப் பார்த்துவிட்டு அங்கு ஆண்கள் இல்லை என நினைத்து பேய்கள் திரும்பிச் சென்றுவிடும் என கிராம மக்கள் நம்புகின்றனர்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்திலும் சிலர் இவ்வாறான மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்