பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு சத்திர சிகிச்சை

பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு சத்திர சிகிச்சை

பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு சத்திர சிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2018 | 12:03 pm

COLOMBO (News 1st) – பிரேஸிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான நெய்மாருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது​.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸின் பரிஸ் சென்.ஜெர்மையின் கழகத்திற்காக நெய்மார் விளையாடுகிறார்.

சிறந்த 16 அணிகளின் சுற்றில் நெய்மாருக்கு உபாதை ஏற்பட்டது.

உபாதையிலிருந்து அவரை பூரண குணப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக பரிஸ் சென்.ஜெர்மையின் கழகத்தின் பயிற்றுனரான உனாய் ஏமரி தெரிவித்துள்ளார்.

இதனால் நெய்மார் 8 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பரிஸ் சென்.ஜெர்மையின் கழகத்திற்காக 30 போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மார் அவற்றில் 29 கோல்களைப் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்