சீனாவில் ஆங்கில எழுத்து ”N” இற்கு தடை

சீனாவில் ஆங்கில எழுத்து ”N” இற்கு தடை

சீனாவில் ஆங்கில எழுத்து ”N” இற்கு தடை

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2018 | 4:49 pm

சீனாவில் ஆங்கில எழுத்து ”N” இற்கு தடை

சீனாவில் ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் N என்ற எழுத்தைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.

N என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது என அரச செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மட்டுமல்லாது சீன மொழியான மாண்டரினிலும் N என்ற எழுத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக எவரும் விமர்சனங்களை முன்வைப்பதைத் தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிபரின் பெயரில் ஆங்கில எழுத்தான N இரண்டு முறை வருகிறது. இதனால் அதிபருக்கு எதிரான விமர்சனங்களைத் தடுக்கும் வகையில், மிக சாமர்த்தியமாக அந்நாட்டு அரசாங்கம் N என்ற ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தவும், இதே ஒலியில் மாண்டரின் மொழியில் வரும் எழுத்தைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

சீனாவின் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அங்கு அதிபர், துணை அதிபர் ஆகியோர் இரண்டு முறைகள் தான் பதவி வகிக்க முடியும்.

இதனால் அந்த நடைமுறையை மாற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் அதிபர் ஜி ஜின்பிங்.

இதன்படி, அவர் வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிக்க முடியும்.

எவ்வாறாயினும், அதிபரின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்