காலா டீசர் வௌியாகவில்லை: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தனுஷ்

காலா டீசர் வௌியாகவில்லை: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தனுஷ்

காலா டீசர் வௌியாகவில்லை: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தனுஷ்

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2018 | 11:40 am

COLOMBO (News 1st) – பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் ரிலீசில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கின்றார்.

இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் ரீலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ‘காலா’ டீசர் மார்ச் 2 ஆம் திகதி வெளியாகும் என்று நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘காலா’ டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம், டீசர் தள்ளிவைப்புக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா,இரஞ்சித் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம், வருகிற ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்