இன்வெஸ்ட் ஶ்ரீலங்கா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சிங்கப்பூர் பயணம்

இன்வெஸ்ட் ஶ்ரீலங்கா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சிங்கப்பூர் பயணம்

இன்வெஸ்ட் ஶ்ரீலங்கா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சிங்கப்பூர் பயணம்

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2018 | 7:01 am

COLOMBO (News 1st) – இன்வெஸ்ட் ஶ்ரீலங்கா மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்திலுள்ள முன்னணி முதலீட்டாளர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்