ஹோமாகம வீட்டில் தந்தை மகளின் சடலங்கள்

ஹோமாகம வீடொன்றிலிருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு

by Bella Dalima 28-02-2018 | 5:43 PM
Colombo (Newsfirst) ஹோமாகம - வேகந்த வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் சடலங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலங்கள் ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 41 வயதான தந்தையும் மூன்றரை வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர். குறித்த நபர் தங்க நகை அடகு பிடிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.