கடந்த வருடத்தில் 112 கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழப்பு

கடந்த வருடத்தில் 112 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு

by Staff Writer 28-02-2018 | 10:38 AM
COLOMBO (Newsfirst) - வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளே அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் இறப்பிற்கான பிரதான காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய ​நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாமையும் அதிளவில் கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பதற்கான ஒரு காரணம் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்தில் 112 கர்ப்பிணிப் பெண் மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப நல பணியகத்தின் வைத்திய அதிகாரி கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.