அலோசியஸ்,கசுன் சீராய்வு மனு: அறிவிக்குமாறு உத்தரவு

அர்ஜூன் அலோசியஸ், கசுன் சீராய்வு மனு தாக்கல்: பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வௌியிடுமாறு உத்தரவு

by Bella Dalima 28-02-2018 | 4:04 PM
Colombo (Newsfirst) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் பிணை வழங்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு விடயம் தொடர்பில் அறிவித்தல் விடுக்கும் உத்தரவை எதிர்வரும் 9 ஆம் திகதி வௌியிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இன்று உத்தரவிட்டார். முறிகள் விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தமக்கு பிணை வழங்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவை இரத்து செய்யுமாறும் ஏதேனுமொரு நிபந்தனையின் கீழ் தமக்கு பிணை வழங்குமாறும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் இரகசியத் தரவுகளைப் பயன்படுத்தி, மத்திய வங்கியின் இரண்டு ஏலங்களில் 9,147 கோடி ரூபா வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டின் கீழ், அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.