மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2018 | 7:26 am

COLOMBO (Newsfirst) – ஹட்டன் டன்பார் மைதானத்தை அண்டிய பகுதியில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நேற்று மாலை முதல் பராக்ரம சமுத்திரத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் செக்கனுக்கு 1380 கன அடி நீர் வௌியேறுவதாக பராக்ரம சமுத்திரத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் அசேல உதயங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்