மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றிலிருந்து விடுவிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றிலிருந்து விடுவிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றிலிருந்து விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Feb, 2018 | 6:08 pm

Colombo (Newsfirst)

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் விதான பத்திரணகே சமந்த குமார, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சிகளில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

6.7 கிராம் ஹெரோயினை  வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டு வெலே சுதாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கில் சாட்சி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தரின் வாக்குமூலத்தில் முரன்பாடுகள் காணப்படுவதாகவும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அளவும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு வழங்கப்பட்ட ஹெரோயின் அளவிலும் வேறுபாடுகள் காணப்படுவதாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்