மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

பெரிய பரந்தனில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-02-2018 | 7:19 AM
COLOMBO (Newsfirst) - கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெரிய பரந்தனில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால், பெண்கள் சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். வறிய மக்களை கொண்ட கிராமமாகையால் மதுபான சாலை பொருளாதார பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இவ்விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் கருத்து வௌியிடுகையில் மக்களின் நலன் சார்ந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். குறித்த மதுபான நிலையம் அமைப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும், மக்கள் சார்பாக தான் கருத்துக்களை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்