சுப்பர் ஸ்டாரின் வில்லனாக விஜய் சேதுபதி?

சுப்பர் ஸ்டாரின் வில்லனாக விஜய் சேதுபதி?

சுப்பர் ஸ்டாரின் வில்லனாக விஜய் சேதுபதி?

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2018 | 11:12 am

COLOMBO (Newsfirst) – சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இவர் நடித்து முடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைய இருப்பதால், ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதனால், ரஜினி படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்