சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா வழங்குவதாக தகவல்

சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா வழங்குவதாக தகவல்

சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா வழங்குவதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2018 | 9:58 am

COLOMBO (Newsfirst) – சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா அனுப்பி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எசிட் எதிர்ப்பு உபகரணங்கள் மற்றும் குழாய்களும் இவ்வாறு வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வடகொரியாவின் அணுவாயுத தயாரிப்பு நிபுணர்கள் சிலரை சிரியா ஆயுத தயாரிப்பு தளங்களில் காணக்கிடைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

சிரியா அரசாங்க படையினரால் தாக்குதல்களின் போது குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வௌியானதை தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வௌியாகியுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்