சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2018 | 7:02 am

COLOMBO (Newsfirst) – சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

வாழ்க்கைச் செலவு குழு நேற்று மாலை கூடியிருந்தது.

இதன்போது சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை மற்றும் இலங்கை சந்தையில் எரிவாயுவின் விலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயார் செய்யுமாறு நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் இரண்டினால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்