கால்பந்து நட்சத்திரம் சமிர் நஸ்ரிக்கு போட்டித்தடை

கால்பந்து நட்சத்திரம் சமிர் நஸ்ரிக்கு போட்டித்தடை

by Staff Writer 28-02-2018 | 9:04 AM
COLOMBO (Newsfirst) - கால்பந்து நட்சத்திரமான நஸ்ரிக்கு ஆறு மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்சனல் மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணிகளின் முன்னாள் மத்திய காப்பாளரான சமிர் நஸ்ரிக்கு ஊக்க மருந்து பாவனை காரணமாக ஆறு மாத காலப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட முறையிலான ஊக்கமருந்தை பயன்படுத்தியமைக்காக உலக ஊக்கமருந்து முகவரகத்தால் இந்தத் தடை நேற்று விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்தாட்ட ஒழுக்காற்று குழு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸிற்கு விடுமுறை காரணமாக சென்றிருந்த போது வாந்தி கோளாறு காரணமாக குறித்த மருந்தை சமிர் நஸ்ரி பயன்படுத்தியுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.