கோட்டாபயவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கோட்டாபயவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கோட்டாபயவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 5:31 pm

Colombo (Newsfirst) 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோரால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தடை உத்தரவை நீடிப்பதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார்.

அதற்கமைய, இந்த வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்