by Bella Dalima 27-02-2018 | 4:31 PM
பப்புவா நியூகினியா தீவுப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (26) காலை 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்போது ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியவர்களே உயிரிழந்துள்ளனர்.
30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.