சிங்கப்பூர் முகவரியில் அர்ஜூன மகேந்திரன் இல்லை

அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த சிங்கப்பூர் முகவரியில் அர்ஜூன மகேந்திரன் இல்லை

by Bella Dalima 27-02-2018 | 7:15 PM
Colombo (Newsfirst) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த சிங்கப்பூர் முகவரியில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் வழங்கியிருந்த சிங்கப்பூர் முகவரிக்கு, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அழைப்பாணை தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், அந்த முகவரியில் அவர் வசிக்கவில்லை என குறித்த தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முகவரியிலுள்ள குடியிருப்புக் கட்டிடத் தொகுதியில் இருந்து அவர் வௌியேறியுள்ளதாக இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறினார். முறிகள் சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு வாக்குமூலம் வழங்குமாறும் அர்ஜூன மகேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக பெப்ரவரி 16 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் அன்றைய தினம் ஆஜராகவில்லை.