விசாரணைகள் காரணமாக நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

விசாரணைகள் காரணமாக நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

விசாரணைகள் காரணமாக நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2018 | 8:13 am

COLOMBO (Newsfirst) – மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளதாக தடயவியல் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதில் குற்றம் ஏதும் நிகழவில்லை எனவும் தடயவியல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஶ்ரீதேவியின் கணவர், போனி கபூரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவரின் வாக்குமூலம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதால் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

திருமண விழாவில் பங்கேற்று தனியாக மும்பைக்கு திரும்பிய போனிகபூர், மீண்டும் டுபாய்க்கு சென்றது ஏன் என கேள்வியெழுப்பட்டுள்ளது.

குளியல் தொட்டியிலர் 15 நிமிடங்களாக நீரில் தத்தளித்த ஶ்ரீதேவியின் அலறல் சத்தம், அறையிலிருந்த போனி கபூருக்கு கேட்கவில்லையா எனவும் பொலிஸார் வினவியுள்ளனர்.

மனைவியை காப்பாற்றுவதற்கு, போனிகபூர் ஹோட்டலின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களை அழைக்காதது ஏன் எனவும் பொலிஸார் கேள்வியெழுப்பியுள்ளனர்.

போனி கபூரிடம் வாக்குமூலங்ளை பதிவு செய்த பொலிஸார், ஶ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி கமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நடிகை ஶ்ரீதேவியின் மரண வழக்கு விசாரணைகளை அந்நாட்டு அரச தரப்பு சட்டத்தரணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்