முரளிதரனின் சாதனையில் 50 வீதத்தைக் கூட அடையவில்லை: ரங்கன ஹேரத்

முரளிதரனின் சாதனையில் 50 வீதத்தைக் கூட அடையவில்லை: ரங்கன ஹேரத்

முரளிதரனின் சாதனையில் 50 வீதத்தைக் கூட அடையவில்லை: ரங்கன ஹேரத்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 9:08 pm

முரளிதரனின் சாதனையில் 50 வீதத்தைக் கூட தாம் அடையவில்லை என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் குறிப்பிட்டார்.

ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ரங்கன ஹேரத் மேலும் குறிப்பிட்டதாவது,

நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் அணிக்குத் தெரிவாகும் புதுமுக வீரரிடம் என்னுடைய ஆற்றல்களை எதிர்பார்ப்பது தவறு. முரளிக்கு பின்னர் நான். அதாவது முரளி அணிக்கு ஆற்றிய சேவையில் நான் 50 வீதத்தைக்கூட ஆற்றினேன் என்று கூற முடியாது. முரளியின் 800 டெஸ்ட் விக்கெட்களையும், 500 சர்வதேச ஒருநாள் விக்கெட்களையும் எவராலும் நெருங்க முடியாது. எனவே, எம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதுமானளவு போட்டிகள் வழங்கப்பட்டு தேவையான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்