மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று 3 வருடங்கள்: திட்டம் தீட்டிய சூத்திரதாரி எங்கே?

மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று 3 வருடங்கள்: திட்டம் தீட்டிய சூத்திரதாரி எங்கே?

மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று 3 வருடங்கள்: திட்டம் தீட்டிய சூத்திரதாரி எங்கே?

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 9:53 pm

Colombo (Newsfirst)

மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்களாகின்றன.

 • 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்த மோசடி இடம்பெற்றது.
 • மூன்று வருடங்களுக்கு முன்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் பதவி வகித்தபோது, 30 வருடங்களில் முதிர்ச்சியடையும் பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதாக அறிவித்தார்.
 • ஏலத்தின் நிறைவில் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 20 பில்லியன் ரூபா வரை முறிகளை விநியோகிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தீர்மானித்தார்.
 • மத்திய வங்கி அதிகாரிகளின் எதிர்ப்பினால் அது 10 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.
 • 10 பில்லியனுக்கும் அதிகமான நிதி, 12.05  எனும் வழமைக்கு மாறான வட்டி வீதத்திற்கு அமைவாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
 • அப்போதைய நடைமுறை வட்டி வீதம் 9.85 வீதமாகும்.
 • மற்றுமொரு முதல் நிலை கொள்வனவாளரான இலங்கை வங்கி, பேர்ப்பச்சுவல் நிறுவனத்திற்காக விலை மனு கோரியமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வௌியிட்டனர்.
 • ஊடக வௌிக்கொணர்வு மற்றும் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்தார்.
 • கடந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாக முறிகள் விநியோக நடைமுறையில் தாம் மாற்றத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.
 • டியூ குணசேகர தலைமை தாங்கிய கோப் குழு, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.
 • விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அந்தக் குழு கலைக்கப்பட்டு, விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.
 • முறிகள் ஏலத்தின் போது பிரதமர் வழங்கிய ஆலோசனைக்கமையவே செயற்பட்டதாக அர்ஜூன மகேந்திரன், டியூ குணசேகரவின் கோப் குழுவிற்கு தெரிவித்ததாக தகவல் வெளியானது.
 • பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
 • அந்த கோப் குழு அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.
 • அடிக்குறிப்புகள் பரிந்துரைகளில் தாக்கம் செலுத்தியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
 • எதிர்ப்பிற்கு மத்தியில், ஜனாதிபதியால் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
 • 11 மாதங்களாக ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் நாட்டிற்கு வெளிப்படுத்தப்பட்டன.
 • கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
 • ஜனாதிபதி அதனை சபாநாயகரிடம் கையளித்தார்.
 • அறிக்கையூடாக பல விடயங்கள் அம்பலமாகின.
 • பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சாதகமான வகையில், அர்ஜூன மகேந்திரன் செயற்பட்டார்.
 • அவரின் மருமகனான அர்ஜூன் அலோசியஸ் அந்த உறவு முறையைப் பயன்படுத்தி, ஏலத்தில் பாரிய அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டார்.
 • ஆணைக்குழுவின் வெளியான தகவல்களின் பின்னர், ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
 • அர்ஜூன மகேந்திரன் மற்றும் முன்னாள் பிரதி ஆளுநர் பீ.சமரசிறி ஆகியோர் பிரதமருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர்.
 • கணக்காய்வு மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்தது.
 • அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
 • ரவி கருணாநாயக்க பின்வரிசை உறுப்பினரானார்.
 • சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

நாட்டில் பாரிய நிதி மோசடி இடம்பெற்று மூன்று வருடங்கள்…
மோசடிக்கு திட்டம் தீட்டிய சூத்திரதாரி எங்கே?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்