திருத்தப்பட்ட கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 3:19 pm

திருத்தப்பட்ட கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என அவர் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அமைச்சரவை கூடியது.

எனினும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை.

அர்ஜுன் ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தலதா அத்துகோரள, ஹரின் பெர்னாண்டோ ஆகிய அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்