தியத்தலாவ வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணை

தியத்தலாவ வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணை

தியத்தலாவ வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2018 | 6:58 am

COLOMBO (Newsfirst) – பண்டாரவளை தியத்தலாவ பகுதியில் பஸ்ஸில் கைக்குண்டு வெடித்தமை தொடர்பில் கைக்குண்டை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாயிடம் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு அவரை பார்வையிட வந்த அவருடைய மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் தற்போது தியதலாவ வைத்தியசாலையில் அனுமத்திக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இராணுவதளபதியின் உத்தரவிற்கமைய 5 பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்புச்சம்பவத்தில் 19 பேருக்கு காயங்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்