சிலாபத்தில் காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

சிலாபத்தில் காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

சிலாபத்தில் காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2018 | 11:16 am

COLOMBO (Newsfirst) – சிலாபம் இரணவில பகுதியில் காணாமற்போன 10 வயதான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் முதல் குறித்த சிறுவன் காணாமற்போயிருந்தார்.

சிறுவன், சமிந்துகம பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு வேறொருவருடன் சென்றமையை, பிரதேச மக்கள் அவதானித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் இறுதியாகவிருந்த வர்த்தக நிலையத்திலுள்ள சிசிடிவி கமராவின் காட்சிகளிலும் சிறுவன் பிரிதொரு நபருடன் காணப்பட்டமை பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவனுடன் காணப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்