‘கோலமாவு கோகிலா’ First Look வௌியீட்டு திகதி அறிவிப்பு

‘கோலமாவு கோகிலா’ First Look வௌியீட்டு திகதி அறிவிப்பு

‘கோலமாவு கோகிலா’ First Look வௌியீட்டு திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2018 | 9:52 am

COLOMBO (Newsfirst) – நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் First Look ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளன.

இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் First Look போஸ்டரை வரும் மார்ச் 5ஆம் திகதி வெளியிட இருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 8 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்