ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 4:51 pm

COLOMBO (Newsfirst) – ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் பஸ்ஸொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்கல்ல உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் ஆஜராகி திரும்பிய வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

பஸ்ஸை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை முதல் அம்பாறை வரை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தங்கல்ல ரன்ன பகுதியைச் சேர்ந்தவரும் தற்காலிகமாக சியம்பலாண்டுவ பகுதியில் வசித்து வரும் 33 வயதான ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்