ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக வீழ்ந்தமையினாலேயே உயிரிழந்துள்ளார் – பிபிசியில் செய்தி

ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக வீழ்ந்தமையினாலேயே உயிரிழந்துள்ளார் – பிபிசியில் செய்தி

ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக வீழ்ந்தமையினாலேயே உயிரிழந்துள்ளார் – பிபிசியில் செய்தி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 5:24 pm

COLOMBO (Newsfirst) – நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக வீழ்ந்தமையினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.

அவரது உடலில் மது அருந்தியதற்கான சான்று இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டுபாயில் தனது உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது கடந்த சனிக்கிழமை இரவு அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வௌியான நிலையில், தடையவியல் அறிக்கை தற்போது வௌியாகியுள்ளது.

இதேவேளை, டுபாயில் இருந்து ஶ்ரீதேவியின் பூதவுடல் இன்று மும்பாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்