வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்

வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்

வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 3:45 pm

COLOMBO (Newsfirst) – பதுளை மஹியங்கனை பிரதான வீதியின் வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

இன்று காலை பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரில் பயணித்த காரின் சாரதி உள்ளிட்ட மூவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமற் போயுள்ளார்.

காாணமற் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்