வறட்சி காரணமாக 3 இலட்சம் மக்கள் பாதிப்பு

வறட்சி காரணமாக 3 இலட்சம் மக்கள் பாதிப்பு

வறட்சி காரணமாக 3 இலட்சம் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 3:49 pm

COLOMBO (Newsfirst) – நாட்டில் நிலவும் வறட்சியினால் 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 6000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 6,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் , உடப்பு, ஆண்டிமுனை, செல்வபுரம் ஆகிய பிரதேசங்களில் கடுமையான வறட்சி நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் போதிய நீர் இன்மையினால் அழிவடைந்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலும் பல பகுதிகளில் வறட்சியுடான காலநிலை நிலவுகின்றது.

அதற்கமைய மடு, மாந்தை ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதுடன் குளங்களில் நீர் வற்றிப் போயுள்ளமையினால் மீன் பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வௌியிடுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்