மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இறுதிக் கிரியைகள் நாளை

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இறுதிக் கிரியைகள் நாளை

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இறுதிக் கிரியைகள் நாளை

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 3:52 pm

COLOMBO (Newsfirst) – மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 3.30 அளவில் அவரின் உடலை தாங்கிய விமானம், டுபாயிலிருந்து புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இறுதி சடங்குகள் நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

54 வயதான ஸ்ரீ தேவி டுபாயில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

ஸ்ரீ தேவி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மேலும் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

தனது 4 ஆவது வயதில் துணைவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஸ்ரீதேவி.

பல்வேறு மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஶ்ரீதேவி, சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஶ்ரீதேவியின் ஏராளமான ரசிகர்கள், அவரின் மும்பை இல்லத்திற்கு முன்பாக நேற்று முதல் குழுமியுள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்