சுடலை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி செல்வபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

சுடலை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி செல்வபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

சுடலை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி செல்வபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 3:40 pm

COLOMBO (Newsfirst) – முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்

செல்வபுரம் மற்றும் வட்டுவாகல் கிராமங்களுக்கு இடையில் காணப்படும் சுடலை பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருமாறும் கைது செய்யப்பட்ட தங்களின் கிராம அபிவிருத்தி சங்க தலைவரை விடுதலை செய்யுமாறும் கோரி செல்வபுரம் மக்கள் இந்த ஆரப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

மேலும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒறுங்கிணைப்புக் குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.

அதற்கமைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இருவரை அழைத்து ஒறுங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்