ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 8:08 pm

COLOMBO (Newsfirst) – ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமானது.

மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், மார்ச் 21ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன்,
நான்கு வாரங்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடரில், மார்ச் மாதம் 16ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று ஆரம்பமான கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ் உரையாற்றினார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்ததுவதற்கு திட சங்கல்பத்துடன் செயற்பட வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைனும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்