Ironman 70.3: சம்பியன்  ஐக்கிய அரபு இராச்சியம்

Ironman 70.3 சர்வதேசப் போட்டி: சம்பியன் பட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு

by Staff Writer 25-02-2018 | 5:14 PM
COLOMBO (Newsfirst) - Ironman 70.3 சர்வதேச போட்டி காலி முகத்திடலில் இன்று காலை 06 மணிக்கு ஆரம்பமானது. மூன்று அம்சங்களைக் கொண்ட இந்தப்போட்டியில் நீச்சல், சைக்கிளோட்டம், வீதியோட்டம் உள்ளிட்ட போட்டிகள் உள்ளடக்கப்பட்டன. போட்டியில் 63 நாடுகளைச் சேர்ந்த 880 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் போட்டியில் கலந்துக்கொண்டனர். வெற்றிக்காக வீர வீராங்கனைகள் 1.9 கிலோ மீற்றர் தூரம் கடலில் நீந்திய பின்னர் 90 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணிக்க வேண்டியது போட்டி விதிமுறையாகும். அதனைத்தொடர்ந்து இறுதி அங்கமான 20.1 கிலோ மீற்றர் தூரம் மரதனோட்டப்போட்டியை நிறைவு செய்ய வேண்டும். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒலிவர் கொடார்ட் (Olivier GODART) ஆடவர் பிரிவில் சம்பியனானார். அதற்கமைய Ironman 70.3 சர்வதேச போட்டியின் சம்பியன் பட்டத்தினை அவர் சூடினார். ஆடவர் பிரிவில் இத்தாலியின் Davide ROSSETTI இரண்டாமிடத்தை பெற , ஸ்பெய்னின் Francisco Gabriel மூன்றாமிடத்தை அடைந்தார். மகளிர் பிரிவில் சிங்கப்பூரின் Ling Er வெற்றியீட்டினார். வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்பார்க்கின்ற போட்டியாளர்களின் இலட்சியத்தை ஈடேற்றும் நோக்கில் இந்த சர்வதேச போட்டி இலங்கையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.youtube.com/watch?v=Rwnz6kl6z0M