by Staff Writer 25-02-2018 | 9:35 AM
அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் 8 அமைச்சுகள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய அமைச்சுகள் சில மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.